[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

மோடியின் அடுத்த அதிரடி. வங்கிக்கணக்கு விவரங்களை ஒப்படைக்க பாஜக எம்.பி.,எம்.எல்.ஏ.,க்களுக்கு உத்தரவு

pm-modi-asks-all-bjp-mps-and-mlas-to-give-details-of-their-bank-accounts-to-amit-shah-from-nov-8-to

நவம்பர் 8-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை வங்கிகளில் மேற்கொள்ளும் பணப்பரிவர்த்தனை குறித்த விவரங்களை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் சமர்ப்பிக்க அக்கட்சி எம்எல்ஏ, எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்து புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், பாஜக எம்எல்ஏ, எம்.பி.க்கள் நவம்பர் 8-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை வங்கிகளில் மேற்கொள்ளும் பணப்பரிவர்த்தனை குறித்த விவரங்களை கட்சித் தலைவர் அமித் ஷாவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் ஏழைகளை பயன்படுத்தி அதனை வெள்ளையாக்க முயற்சிக்கிறார்கள் என்ற புகார் எழுந்ததையடுத்து பாஜக எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கு பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close