[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் போராட்டம் வலுக்கும் நிலையில் ராணுவ வீரர்கள் குவிப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டால், அது ஜனநாயகத்தின் கருப்பு பக்கமாக மாறிவிடும் - வைகோ
  • BREAKING-NEWS பிஎஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 50வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS பிஎஸ்.எல்.வி-சி 48இல் சென்ற ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் வெளியேற வேண்டும் - சஞ்சய் ராவத்
  • BREAKING-NEWS ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட்
  • BREAKING-NEWS இலங்கை, பூடான் நாடுகளை குடியுரிமை மசோதாவில் சேர்க்காதது ஏன்?- ப.சிதம்பரம் கேள்வி

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்மீந்தரை சுற்றி வளைத்தது டெல்லி போலீஸ்

nabha-jailbreak-terrorist-harminder-singh-arrested

பஞ்சாப் மாநிலம் நாபா சிறையில் இருந்து தப்பிய காலிஸ்தான் விடுதலை முன்னணி தலைவர் ஹர்மீந்தர் சிங் மீண்வை டெல்லி போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பாட்டியாலாவை அடுத்த நபா பகுதியில் உள்ள சிறைக்கு நேற்று காவலர் உடையில் வந்து தாக்குதல் நடத்திய 10 பேர், சிறையிலிருந்து காலிஸ்தான் தலைவர் ஹர்மீந்தர் உள்ளிட்ட 6 பேரை தப்புவித்தனர். இந்த சம்பவத்தை அடுத்து ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை உத்தரப்பிரதேச மாநிலம் ஷம்லியில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து தப்பிய காலிஸ்தான் பயங்கரவாதி பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என பஞ்சாப் மாநில அரசு அறிவித்தது. இந்த நிலையில் டெல்லி போலீசார் இன்று பயங்கரவாதி ஹர்மீந்தர் சிங் மீண்வை கைது செய்தனர். மேலும் அவருடன் தப்பிய 5 பயங்கரவாதிகளை தேடிவருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close