தமிழக - கேரள எல்லைப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 மாவோயிஸ்ட்கள் புகைப்படங்களை கேரள காவல்துறை வெளியிட்டுள்ளது.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நேற்று (நவ.25) அதிரடிப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பெண் உள்பட 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். படுக்கா வனப் பகுதியில் மாவோயிஸ்டுகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக அம்மாநில உளவுத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கேரள அதிரடிப் படையினர் அங்கு விரைந்தனர். இதை அறிந்த மாவோயிஸ்டுகள் 11 பேர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் குப்பு தேவராஜ், சோமன், அஜிதா ஆகிய 3 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, கொல்லப்பட்ட மாவோயிஸ்களின் புகைப்படங்களை கேரள காவல்துறை வெளியிட்டுள்ளது. இவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
“சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்”- ப.சிதம்பரத்தை சந்தித்த வைரமுத்து ட்வீட்
“உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை”- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை..!
டெல்லியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 35 பேர் உயிரிழப்பு
வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..!
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 2-ஆவது டி20: ரோகித் சாதனையை முறியடிப்பாரா விராட்?