[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

உ.பி ரயில் விபத்து... பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு

train-accident-victims-reward

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இன்று அதிகாலை பாட்னா - இந்தூர் விரைவு ரயில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு
நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை செலவுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.

மத்திய ரெயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3.5 லட்சம், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாநில அரசின் சார்பில் தலா ரூ. 2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதுபோல் உத்தரப்பிரதேச அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

இந்த விபத்தில் 97 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து
நடைபெற்று வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close