[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

ரயில் டிக்கெட் ரத்து செய்ய ஆதார் அல்லது பான்கார்டு எண் கட்டாயம்

aadhar-or-pan-number-is-mandatory-for-cancelation-of-ticket-says-southern-railway

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்ய ஆதார் அல்லது பான் கார்டு எண்ணைக் கட்டாயம் அளிக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், அதனுட‌ன் சேர்த்து வங்கிக் கணக்கு விவரத்தையும் தெரிவித்தால்தான், டிக்கெட் ரத்து செய்ததற்கான கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மூலம் நவம்பர் 24 வரை ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று ரயில்வே முன்னதாக அறிவித்திருந்தது. இதையடுத்து தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற, சிலர் அதிகக் கட்டணங்கள் கொண்ட முதல் வகுப்பு ஏசி டிக்கெட் உள்ளிட்ட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதாக புகார் எழுந்தது. அதன்பின்னர் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்து கட்டணங்களைத் திரும்பப் பெறுவதாகவும் புகார்கள் எழுந்ததையடுத்து ரயில்வே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close