[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

விடிந்தால் திருமணம்.. விடிய விடிய ஏடிஎம் முன் காத்திருந்த மணமகன்

overnight-wait-for-a-man-outside-atm-in-delhi-s-bhajanpura-whose-wedding-is-scheduled-for-tomorrow

நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில் பணத்திற்காக மணமகன் ஒருவர் ஏடிஎம் முன் விடிய விடிய காத்து இருந்த சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து மக்கள் தங்களது பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காகவும், புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை பெறும் பொருட்டும் வங்கிகள் மற்றும் ஏடிஎம்-கள் முன்பு நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர். பெரும்பாலான ஏடிஎம்-களில் போதிய பணம் இல்லாததால் மக்கள் சிரமத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில் மணமகன் ஒருவர் ஏடிஎம் வாசல் முன் பணத்திற்காக விடிய விடிய காத்து இருந்த சம்பவம் டெல்லியில் உள்ள பஜன்புராவில் நிகழ்ந்துள்ளது. சுனில் என்பவரின் திருமணம் நாளை நடைபெற உள்ளது. திருமண தேவைக்காக அதிகமானோருக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளதால் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் முன் விடிய விடிய காத்து இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். சுனிலின் மற்ற இரு சகோதர்களும் அருகாமையில் உள்ள ஏடிஎம்-கள் முன் காத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close