[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

வங்கிகளில் தினசரி வழங்கப்படும் அதிகபட்ச தொகை ரூ.4,500ஆக உயர்வு

withdrawal-limit-from-atms-increased-to-rs-2500-from-rs-2000-finance-ministry

வங்கிகளில் தினசரி வழங்கப்படும் அதிகபட்ச தொகையை ரூ.4,000-த்திலிருந்து ரூ.4,500ஆக உயர்த்தி வழங்க நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

செல்லாத நோட்டு அறிவிப்பால் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் டிசம்பர் 30ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு நபருக்கு ரூ.4,000 வரை ரொக்கமாகவும், மீதத்தொகை வங்கிக் கணக்கில் இருப்பு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தசூழலில், அதிகபட்ச தொகை வரம்பை ரூ.4,000-த்திலிருந்து ரூ.4,500ஆக அதிகரிக்க வங்கிகளுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஏடிஎம்கள் மூலம் தினமும் எடுக்கப்படும் தொகைக்கான உச்சவரம்பு ரூ.2,000-த்திலிருந்து ரூ.2,500ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல, ஒரு வாரத்தில் நபர் ஒருவர் ரூ.24,000 வரை வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் வாழ்வு சான்றிதழை அளிக்க வேண்டிய காலக்கெடு 2017ம் ஆண்டு ஜனவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close