[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

செல்லா நோட்டுகளை காணிக்கையாக செலுத்த வேண்டாம்.. உண்டியலில் நோட்டீஸ்

kanpur-temple-asks-devotees-not-to-donate-old-rs-500-1000-notes

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை காணிக்கையாக பக்தர்கள் உண்டியலில் செலுத்த வேண்டாம் என உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு கோவிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மற்றும் ஏடிஎம்-கள் மூலம் மக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், பக்கதர்கள் தங்களது பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை காணிக்கைகளாக செலுத்த வேண்டாம் என உண்டியலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், பிரதமர் மோடியின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு தாங்களும் ஆதரவு தெரிவித்து, இத்தகைய செயலை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close