[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தமிழக மின்துறை அமைச்சர் சந்திப்பு

tn-minister-thangamani-meets-central-minister

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி சந்தித்து பேசியுள்ளார்.

டெல்லியில் மத்திய மின்துறை அமைச்சரான பியூஷ் கோயலை தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி இன்று சந்தித்து பேசியுள்ளார். அப்போது வடசென்னை மின் திட்டம், உப்பூர் அனல் மின் நிலைய திட்டம் உள்ளிட்ட தமிழக மின் திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய அளவில் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

மேலும், ம‌த்திய அரசின் உதய் மின்விநியோகத் திட்டத்தில் தமிழகம் இணைவது தொடர்பான அம்சங்கள் குறித்தும் அமைச்சர்கள் இருவரும் ஆலோசித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

உதய் திட்டத்தால் தமிழக மின்சார விநியோக நிறுவனத்துக்கு கடும் இழப்பு ஏற்படும் என்று கூறி தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தமிழக மின்துறை அமைச்சர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close