[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்

தபால் நிலையங்களில் மானிய விலையில் உணவு தானியங்கள்..!

post-offices-to-start-selling-pulses-at-subsidised-rates

தபால் நிலையங்களில் மானிய விலையில் உணவு தானியங்கள் விற்பனை செய்ய நுகர்வோர் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

டெல்லியில் ஒன்றிய நுகர்வோர் செயலாளர் ஹெம் பாண்டே தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய உணவு தானியங்களை தபால் நிலையங்களில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தபால் நிலையங்களில் பண்டிகை காலங்களில் கையிருப்பில் உள்ள பருப்பு வகைகளை அதிகளவில் இருப்பு வைக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 500 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து தானியங்கள் கொள்முதல் செய்யப்படுவதாகவும், தானியங்களுக்கான பணம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் உடனுக்குடன் வரவு வைக்கப்படுவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள், வேளாண்மை, உணவுத்துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் மற்றும் இந்திய உலோகங்கள் மற்றும் கனிமங்கள் டிரேடிங் கார்ப்பரேஷன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close