[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்

8-ஆவது பி‌ரிக்ஸ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்

today-start-brics-conference

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாடு கோவாவில் இன்று தொடங்குகிறது.

இரு நாட்கள் நடக்கவுள்ள இம்மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் , சீன அதிபர் ஜிங்பின், பிரேசில் அதிபர் மைக்கேல் டெர்மர் மற்றும் தென்னாப்ரிக்க நாட்டுத் தலைவர்கள், ஆகியோரை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

பிராந்திய மற்றும் சர்வதேச சவால்கள் குறித்து இம்மாநாட்டில் ஆலோசிக்கப்படவுள்ளன. அதேபோல், பயங்கரவாதம், முதலீடு, வர்த்தகம் உள்ளிட்டவை குறித்தும் விரிவாக விவாதிக்கப்படவுள்ளன.

இதில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த ராஜ்‌ஜிய ரீதியிலான நடவடிக்கையை எடுக்கும் வகையில், பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பை இந்தியா நாடும் என்று கூறப்படுகிறது.

பிரிக்ஸ் மாநாடு குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ‌ இந்த மாநாடு பிரிக்ஸ் நாடுகளிடையேயான ஒத்துழைப்பை பலப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய‌ அதிபர் இ‌‌டையே நடைபெறும் பேச்சுவார்த்தையில், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அதேபோல், கூடங்குளம் அணு உலையில் 3-வது மற்றும் 4-வது அலகுகளின் கட்டுமானப் பணிகளை மோடியும், புதினும் ‌தொடங்கி வைக்கின்றனர்.

பிரிக்ஸ் கூட்டமைப்பு

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா நாடுகளை அங்கமாக கொண்டதுதான் பிரிக்ஸ் கூட்டமைப்பு. உலக மக்கள் தொகையில் 43 சதவிகித்தைக் ‌கொண்ட மிகப்பெரிய கூட்டமைப்பு பிரிக்ஸ்.

சர்வதேச அளவில் 17 சதவிகித வர்த்தக‌த்தையும், 30 சதவிகித உற்பத்தியையும் பிரிக்ஸ் நாடுகள் கொண்டுள்ளன. ‌2006-ல் பிரிக் என ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில், 2010-ம் ஆண்டு தென்னாப்ரிக்கா இணைந்ததால் பிரிக்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close