[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

சங்மாவின் பங்களா...குடியரசுத் தலைவர் பிரணாப்பின் ஓய்வு கால பங்களா?

sangma-s-bungalow-may-become-pranab-s-retirement-home

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முடிகிறது. அவர் இரண்டாவது முறையாக மீண்டும் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. எனவே குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து பிரணாப் ஓய்வு பெற்ற பின்பு, குடியேறுவதற்காக உயர்தர பங்களாவை ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக ஏபிஜே அப்துல் கலாம் சாலையில் 34ம் நம்பர் இல்லத்தில் தங்கியுள்ள முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.வி. சங்மாவின் குடும்பத்தினரை காலி செய்யும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

டைப்-V111 பங்களாவான இதில் மேகாலயாவில் இருந்து மக்களவை எம்பியாக உள்ள சங்மாவின் மகன் கன்ரோட், தங்கியுள்ளார். ஊரக வளர்ச்சி துறை அமைச்சகம் சார்பில், எம்.பி கன்ரோட்டிடம், பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதில் உயர்தர பிரிவிலான டைப்-V111 பங்களாவில் எம்.பி.க்கள் தங்க தகுதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் செயலாளர், ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்திடம், அடுத்த ஆண்டு ஜுலையில் ஓய்வு பெறும் முகர்ஜிக்கு பொருத்தமான பங்களாவை ஒதுக்கும்படி கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

13வது குடியரசுத் தலைவர் தேர்தலில், பிராணப் முகர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட சங்மா, இந்தாண்டு மார்ச் மாதம், தனது 68வது வயதில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close