[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவத் தாக்குதல்: என்ன நடந்தது?..எப்படி நடந்தது?

army-s-surgical-strikes-at-loc-how-it-happened

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

தாக்குதலின் பின்னணி:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரியில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் நுழைந்து 4 பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 18 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் உதவியதாகக் குற்றச்சாட்டு எழுந்தநிலையில், இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் பல்வேறு குரல்கள் எழத் தொடங்கின. இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் நடக்க இருந்த சார்க் மாநாட்டைப் புறக்கணித்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்தது.

பதிலடி...

இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு 12.30 மணி முதல் வியாழக்கிழமை அதிகாலை 4.30 வரை இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. விமானப்படை விமானங்களில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பீமர், ஹாட்ஸ்பிரிங், கெல் மற்றும் லிபா பகுதிகளில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில், அந்த பகுதியில் செயல்பட்டு வந்த 7 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலை உறுதி செய்துள்ள இந்திய ராணுவம், நமது வீரர்கள் யாரும் இந்த தாக்குதலில் காயமடையவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 35 முதல் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

போர் மூளுமா?..

பொதுவாக ஒவ்வொரு நாடும் தனது எல்லையைப் பாதுகாக்க ராணுவத்தை எல்லைப் பகுதிகளில் குவிப்பது வழக்கம். மேலும், அண்டை நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதாக எண்ணினால், அந்த நாட்டின் எல்லைப்பகுதிகளில் புகுந்து குறிப்பிட்ட அந்த பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதுண்டு. மேலும், இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய பகுதி பாகிஸ்தானின் பகுதி அல்ல, பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதேநேரம் இது போர் நடத்துவதற்கான அழைப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. பர்மா எல்லையில் கடந்த ஜூனில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் நாகா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால், அந்த தாக்குதல் குறித்து இந்திய ரணுவம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close