பாகிஸ்தானின் பலுசிஸ்தான், கைபர், பக்துன்கவா, சிந் உள்ளிட் பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும், இந்துகள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது வழக்குகள் தொடரப்படுவதாகவும் ஐநா மனித உரிமைகள் குழு கூட்டத்தில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வன்முறையை தூண்டுவதையும், ஆதரிப்பதையும் பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ளவேண்டும் என ஐநா மனித உரிமை குழுவின் 33வது கூட்டத்தொடரில் இந்தியாவின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையும் தவிர்க்கவேண்டும் எனவும் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் ஆக்ரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியிலிருந்து வெளியேறும்படி மனித உரிமை குழு பாகிஸ்தானை வலியுறுத்தவேண்டும் என்றும் இந்தியா தெரிவித்தது. இதனிடையே உரி தாக்குதல் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி உரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து எடுத்துரைத்தார். இந்த ஆண்டு இதுவரை எல்லை தாண்ட முயற்சித்த 100க்கும் அதிகமான பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
“பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது” - ஹர்பஜன் சிங்
“பத்து லட்சத்தை திருடிட்டாங்க..” - சட்டசபையில் அழுத எம்.எல்.ஏ
“என் மகள் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தாள்” - டிவி நடிகை கொலையில் திருப்பம்
ஓரிரு நாட்களில் கூட்டணி அறிவிப்பு - ஓபிஎஸ் பேட்டி
“உறுதியானது மகாராஷ்ட்ர பாஜக, சிவசேனா கூட்டணி ” - தேவேந்திர பட்னாவீஸ்