பி.எஸ்.என்.எல் நிறுவனம் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், அவை நிறுவனத்தின் சேவையில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பணிகளை திட்டமிட வேண்டும் என தொலைத் தொடர்பு துறை அறிவுறுத்தியுள்ளது.
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். இரண்டும் கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இவற்றை நஷ்டத்தில் இருந்து மீட்டு நடவடிக்கை எடுக்கும் வகையில், மத்திய அரசு இரு நிறுவனங்களையும் ஒன்றாக இணைக்கும் முடிவை அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக விருப்ப ஒய்வு பெறும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அவ்வாறு விருப்ப ஒய்வின் மூலம் ஊழியர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறையும் பட்சத்தில், அவை நிறுவனத்தின் சேவையில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பணிகளை கவனமாக திட்டமிட வேண்டும் என தொலைத்தொடர்பு துறை அறிவுறுத்தியுள்ளது. விருப்ப ஒய்வு திட்டம் அறிவித்து ஒரு வாரம் கடந்திராத நிலையில், 57ஆயிரம் பேர் வி.ஆர்.எஸ். பெற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்
பொங்கல் பரிசு வழங்க தடையில்லை - மாநில தேர்தல் ஆணையர்
தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
“தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது” - நடிகை நயன்தாரா
இது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி?