[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

தங்கம், வெள்ளி விலை குறைவு

gold-and-silver-rate-are-decrease

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 16 ரூபாய் விலை குறைந்து 25 ஆயிரத்து 712 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 2 ரூபாய் விலை குறைந்து 3,214 ரூபாய்க்கும், ஒரு சவரன் 16 ரூபாய் விலை இறங்கி 25,712 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சென்ற ஜூன் 25-ஆம் தேதி தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் 26,464 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், அன்றுமுதல் தங்கத்தின் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் காணப்படுகிறது. தங்கத்தின் விலை ஓரளவிற்கு குறைந்து வருவதால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

வெள்ளியின் விலையை பொறுத்தவரை கிராமிற்கு 30 காசு விலை குறைந்து 40 ரூபாய் 40 காசுக்கு விற்கப்படுகிறது. இதேபோல அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 36 காசு அதிகரித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close