[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.

ஆப்பிள் இந்தியா நிறுவன லாபம் இரண்டு மடங்காக அதிகரிப்பு..!

apple-india-revenue-up-12-to-13-098-crore-in-fy-2018

ஆப்பிள் இந்தியா நிறுவனத்தின் மொத்த வருவாய் நடப்பாண்டில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

மக்களை கவரும் செல்போன்கள், மேக் என எல்லாவற்றிலும் போட்டி நிறுவனங்கள் ஆயிரம் வந்தாலும் ஆப்பிள் நிறுவன பொருட்களுக்கு இன்று வரை தனி மதிப்பு உள்ளது. அதன்விலை அதிகம் இருந்தாலும் தயாரிப்பில் இருக்கும் சிறப்பம்சங்கள் ஆப்பிள் நிறுவன பொருட்களை வாங்க மக்களை ஆர்வம் காட்டச் செய்கிறது. இந்நிலையில் நடப்பாண்டில் ஆப்பிள் இந்தியா நிறுவனத்தின் மொத்த வருவாய் 12 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்தாண்டில் மொத்த வருவாய் 11,704.32 கோடியாக இருந்த நிலையில் நடப்பாண்டில் மொத்த வருவாய் 12 சதவீதம் ஏற்றம் கண்டு ரூபாய் 13,097.64 கோடியாக உள்ளது. அதேசமயம் நிகர லாபம் இரண்டு மடங்கை தாண்டியுள்ளது. கடந்தாண்டு நிகர லாபம் ரூபாய் 373.38 கோடியாக இருந்த நிலையில் நடப்பாண்டு நிகர லாபம் ரூபாய் 896.33 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்தாண்டு விற்பனைக்கு வந்த ஐபோன் 6 மற்றும் 5S-ஐ காட்டிலும் நடப்பாண்டு வெளிவந்த ஐபோன் 7  உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரித்தே நிகர லாபம் அதிகரிப்பிற்கு காரணமாக சொல்லப்படுகிறது. அதேசமயம் ஜியோ நிறுவனம் நடப்பாண்டில் ரூபாய் 22,947.27 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close