[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு

செப்டம்பர் மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலையில் இவ்வளவு ஏற்றமா..?

petrol-price-rate-in-september-month

செப்டம்பர் மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் 05 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் 67 காசுகளும் உயர்ந்துள்ளன.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. கச்சா எண்ணெய் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் ஆட்டோ ஓட்டுநர்கள், ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இது எதையும் கவனத்தில் கொள்ளாமல் மத்திய, மாநில அரசுகள் வரியை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனிடையே சென்னையில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் 05 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் 67 காசுகளும் உயர்ந்துள்ளன. செப்டம்பர் மாதம் தொடங்கும்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 81 ரூபாய் 75 காசுகளாக இருந்தன. அதேபோல டீசல் விலை லிட்டருக்கு  74 ரூபாய் 41 காசுகளாக இருந்தன. அதன்பின் தினசரி ஏற்றம் கண்டுவந்த பெட்ரோல் விலை, செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி 86 ரூபாய் 80 காசுக்கு விற்பனையானது. டீசல் விலையோ 79 ரூபாய் 08 காசுக்கு விற்பனையானது. அக்டோபர் 1-ஆம் தேதியான இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 87 ரூபாய் 05 காசுகளுக்கும், டீசல் விலை 79 ரூபாய் 40 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close