[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்
  • BREAKING-NEWS டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது

பவர் ரேஞ்சர் துப்பாக்கி முதல் மாசு ஏற்படுத்தாத பட்டாசு வரை: தீபாவளி புதுவரவு பட்டாசுகள்

hundreds-of-new-crackers-introduce-for-diwali-from-sivakasi-manufacturers

தீபாவளி பண்டிகைக்காக சிறுவர்களை ஈர்க்கும் வகையில் இந்த ஆண்டு பவர் ரேஞ்சர் துப்பாக்கி தொடங்கி பல புதுவரவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மாசில்லாத, அதேநேரம் வண்ணங்களை வாரி இறைக்கும் வகையிலான  பட்டாசு ரகங்கள் சந்தைக்கு வந்துள்ளன.

தீபாவளியை வண்ணமயமாக்கும் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள், இந்த ஆண்டும் 100க்கும் மேற்பட்ட வகையிலான புதிய ரக பட்டாசுகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளனர். புதுவிதமான பட்டாசுகளை ஒவ்வொரு பட்டாசு ஆலையும் போட்டிப்போட்டுக்கொண்டு தயாரித்துள்ளன. காலம் காலமாக பயன்படுத்தும் கம்பி மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரங்களுக்கு நவீன வடிவம் கொடுத்துள்ளனர்.

சிறுவர்களுக்கான பொம்மை துப்பாக்கி இந்த ஆண்டு பவர் ரேஞ்சர் கன் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இசையுடன் வெடிக்கும் பட்டாசுகள், புகைப்படம் எடுக்கும்போது ஏற்படும் பிளாஷ் வெளிச்சம் போல 40 முறை பிளாஷ் அடிக்கும் பட்டாசு என பட்டாசு சந்தை களைகட்டுகிறது.

பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், தற்பொழுது முதலே சிவகாசிக்கு பட்டாசு வாங்க வாடிக்கையாளர்கள் குவியத்தொடங்கிவிட்டது. எல்ஈடி திரையில் பட்டாசுகள் வெடிக்கும் விதம் பற்றி விற்பனையாளர்கள் விவரிப்பதால் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பட்டாசுகளை தேர்வு செய்கிறார்கள்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close