[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

ஒரே நாளில் தங்கம் விலை உயர்வு!

gold-prices-up-in-single-day

கடந்த சில நாட்களாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் ரூ.232 உயர்ந்துள்ளது. 

சமீபகாலமாக சர்வேதச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி கடந்த மாதம் ஒரு கிராம் தங்கம் 2,881 ரூபாய் என்ற அடிப்படையில், ஒரு சவரன் ரூ.22,760 ஆக விற்கப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகை காரணமாகவும், தொடர்ந்து வரும் விஜயதசமி, ஆயுத பூஜை போன்ற பண்டிகைகளாளும் தங்கத்தின் விற்பனை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வடகொரியாவின் தொடர் அணுகுண்டு சோதனைகளே சர்வேதச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வதற்கான காரணமாக கருதப்படுகிறது. இதன் எதிரோலியாகவே தற்போது தமிழகத்திலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி வடகொரியாவின் அணுகுண்டு சோதனையால், உலக நாடுகள் மத்தியில் பதற்றநிலை நாளுக்கு அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close