[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

தக்காளி, வெங்காய விலை இப்போது குறையாதாம்!

tomato-prices-rise-up-to-9-fold-in-17-major-cities

கடுமையாக உயர்ந்துள்ள தக்காளி விலை இப்போது குறையாது என்று கூறப்படுகிறது. 

பெரும்பாலான வட மாநிலங்களில் நிலவி வரும் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக வெங்காயம் மற்றும் தக்காளி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சந்தைகளுக்கு வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. டெல்லி, கொல்கத்தா, திருவனந்தபுரம், சென்னை உள்ளிட்ட நாட்டின் 17 முக்கிய நகரங்களில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.90 ஐ தாண்டியுள்ளது. இந்த நிலை உடனடியாக சரியாக வாய்ப்பில்லை எனவும் ஆகஸ்ட் இறுதி வரை இதே நிலை நீடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெங்காய வரத்து, நாள் ஒன்றிற்கு 25,000 குவிண்டாலில் இருந்து 12,000 குவிண்டாலாக குறைந்துள்ளது. டெல்லியில் கடந்த 3 மாதங்களுக்கு முன் ரூ.26 ஆக இருந்த ஒரு கிலோ தக்காளி விலை, தற்போது ரூ.92 க்கு விற்கப்படுகிறது. இது சாமானிய மக்களை வேதனை அடைய வைத்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் சென்னையில் தக்காளி விலை 5 மடங்கும், பெங்களூருவில் 6 மடங்கும், கொல்கத்தாவில் 9 மடங்கும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close