[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கக்கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுகவினர் புகார் மனு
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த சதி நடைபெறுகிறது: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் மக்கள் டிடிவி தினகரனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS நாகையில் போராட்டம் நடத்த வந்த ஹெச்.ராஜாவை வஞ்சியூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்
 • BREAKING-NEWS பணப்பட்டுவாடா செய்தால் தேர்தலை ரத்து செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டையில் உள்ள பிசியோதெரபி கிளினிக்கில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் பறிமுதல்
 • BREAKING-NEWS இருண்டு கிடக்கும் தமிழகத்திற்கு இடைத்தேர்தல் முடிவு வெளிச்சத்தை பாய்ச்சட்டும்- ஸ்டாலின்
 • BREAKING-NEWS வரும் 19 ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்திற்கு பிரதமர் வர உள்ளதாக தகவல்
 • BREAKING-NEWS ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்- பிரதாப் ரெட்டி
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார் ராகுல் காந்தி
 • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வு அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது
 • BREAKING-NEWS தூத்துக்குடி அருகே கடலில் நாட்டுப்படகு பழுதாகி மூழ்கியதில் மீனவர் கென்னடி உயிரிழப்பு
 • BREAKING-NEWS நீர்மட்டம் குறைந்ததால் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராகாததால் 16வது நாளாக குளிக்க தடை விதிப்பு
வணிகம் 24 Jul, 2017 05:56 PM

ஆன்லைன் பணப்பரிவர்த்தனை: அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை...!

online-money-transfers-here-s-what-you-need-to-know

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, ஆன்லைன் பரிவர்த்தனை வேகமாக வளர்ந்து வருகின்றது. நேரடியாக பணத்தைக் கையாளுவதைத் தவிர்த்து ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப் பயன்படும் என்.இ.எஃப்.டி, ஆர்.டி.ஜி.எஸ், யு.பி.ஐ. போன்ற முறைமைகளைக் கையாள்வது குறித்துப் பார்க்கலாம்.

என்.இ.எஃப்.டி:

The National Electronic Fund Transfer எனப்படும் இந்த முறைமை மூலம் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பலாம். இந்த முறைமையைப் பயன்படுத்திதான் மிக அதிக அளவில் பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது. இப்பணப் பரிவர்த்தனையை எப்படி முறையாக செய்வது என்று பார்க்கலாம்.

உங்கள் வங்கிக் கணக்குக்கு நெட்பேங்கிங் வசதி இருக்க வேண்டும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட அடையாள எண் மற்றும் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி லாக்-இன் செய்ய வேண்டும்.

நீங்கள் பணம் அனுப்ப விரும்புபவரின் விவரம் உங்கள் கணக்குடன் இணைக்கப்பட வேண்டும்.

அதற்கு, பணம் அனுப்ப வேண்டியவரின் பெயர், வங்கிக் கணக்கு எண், வங்கிக் கிளைக் குறியீட்டு எண்ணான ஐ.எஃப்.எஸ்.சி. கோடு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்.

பணம் அனுப்ப வேண்டியவரின் விவரம் இணைக்கப்பட்ட பிறகு உங்களது வங்கி அதை உறுதிப்படுத்தும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.

உங்கள் வங்கி உறுதிப்படுத்தியவுடன் நீங்கள் அந்த வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பலாம்.

என்.இ.எஃப்.டி பணப்பரிவர்த்தனைக்கு கட்டணங்கள் உண்டு. ரூ.2.50 முதல் ரூ.25 வரை வரியுடன் கட்டணம் வசூலிக்கப்படும்.

நீங்கள் அனுப்பும் தொகை வரிசைப்படி அன்றைய தினமே சென்று சேரும்.

என்.இ.எஃப்.டி மூலம் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை பரிவர்த்தனை செய்யலாம்.

ஆர்.டி.ஜி.எஸ்:

Real Time Gross Settlement எனப்படும் இந்த முறைமை மூலம் பெருமளவிலான பணத்தை மொத்தமாக அனுப்பலாம். குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் தொகையை அனுப்பலாம். ஆர்.டி.ஜி.எஸ் மூலம் பணம் அனுப்பும்போது கட்டணம் அதிகமாகும். என்.இ.எஃப்.டி முறைமையில் பின்பற்ற அதே வழிமுறைப்படி நீங்கள் பணம் அனுப்ப விரும்புபவரின் விவரங்களை இணைத்து பரிவர்த்தனை செய்யலாம்.

யு.பி.ஐ:

யு.பி.ஐ என்பது Unified Payments Interface என்பதன் சுருக்கம். இந்த புதிய முறைமை மூலம் ஸ்மார்ஃபோனிலிருந்தே எளிய வழியில் பணப்பரிவர்த்தனை செய்யலாம். இந்தப் பரிவர்த்தனைக்கு வங்கிக்கணக்கு எண், கிரெடிட் கார்டு எண், டெபிட் கார்டு எண் போன்ற எந்தத் தனிப்பட்ட விவரங்களையும் கொடுக்கத் தேவையில்லை. இதன் மூலம் ஒரு நாளைக்கு ஒரு முறை அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை அனுப்பலாம். இப்பணப்பரிவர்த்தனையை எப்படி முறையாகக் கையாள்வது என்று பார்க்கலாம்.

உங்களுடைய வங்கிக்கான ஆப்-ஐ தரவிறக்கம் செய்துகொள்ளவும். அதில் உங்கள் நெட் பேங்கிங் ஐடி மற்றும் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி லாக்-இன் செய்யவும்.

Virtual Payment Address எனப்படும் இ-மெயில் முகவரி போன்று வி.பி.ஏ முகவரியை உருவாக்கவும்.

பணம் அனுப்பப்படும் நபரிடமும் வி.பி.ஏ முகவரி இருக்க வேண்டும்.

உங்களுடைய வி.பி.ஏ முகவரியிலிருந்து நீங்கள் அனுப்ப வேண்டிய நபரின் வி.பி.ஏ முகவரிக்கு பணத்தை அனுப்பினால், அவரது கணக்கில் பணம் உடனடியாக சேர்ந்து விடும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close