[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெபாசிட் செய்யும் பணத்திற்கான வரியும்.. அபராதமும்... முழுவிவரம்

deposited-money-fine-and-tax

பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்துக் கட்டும் மத்திய அரசின் திட்டப்படி, மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கிகளில் முழுமையாக டெபாசிட் செய்யலாம். ஆனால், இரண்டரை லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்யும் போது, அதற்கான வருவாய் ஆதாரங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். வருமான வரித்துறை ஆய்வின் போது, டெபாசிட் செய்த தொகைக்கு பொருத்தமான வருவாய் ஆதாரங்களை காண்பிக்க தவறினால், வருமான வரியுடன் 200 சதவிகித அபராதத்தையும் செலுத்த நேரிடும்.

அதன்படி வங்கிகளில் செலுத்தும் பணத்திற்கான அபராதம் என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

இரண்டரை லட்ச ரூபாய் வரை டெபாசிட் செய்தால் அதற்கு வரியோ, அபராதமோ கிடையாது.

5 லட்ச ரூபாய் டெபாசிட் செய்தால் 25 ஆயிரம் ரூபாய் வருமான வரியுடன், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் சேர்த்து 75 ஆயிரம் ரூபாயை, அதாவது மொத்த தொகையில் 15 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.

10 லட்ச ரூபாய் டெபாசிட் செய்தால் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமான வரியுடன், 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் சேர்த்து 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை, அதாவது மொத்த தொகையில் 37.5 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.

15 லட்ச ரூபாய் டெபாசிட் செய்தால் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வருமான வரியுடன், 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் சேர்த்து 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை, அதாவது மொத்த தொகையில் 55 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.

20 லட்ச ரூபாய் டெபாசிட் செய்தால் 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமான வரியுடன், 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் சேர்த்து 12 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை, அதாவது மொத்த தொகையில் 64 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.

30 லட்ச ரூபாய் டெபாசிட் செய்தால் 7 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமான வரியுடன், 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் சேர்த்து 21 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை, அதாவது மொத்த தொகையில் 73 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.

50 லட்ச ரூபாய் டெபாசிட் செய்தால் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமான வரியுடன், 27 லட்ச ரூபாய் அபராதமும் சேர்த்து 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை, அதாவது மொத்த தொகையில் 81 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.

ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்தால் 28 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமான வரியுடன், 56 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் சேர்த்து 84 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை, அதாவது மொத்த தொகையில் 85 சதகிவிதத்தை வரியாக செலுத்த நேரிடும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close