[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS அடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

ஜெ. இல்லாத அதிமுகவை ‘கொங்கு’ புறக்கணிக்கிறதா? 

south-no-longer-an-aiadmk-bastion

அதிமுகவின் வரலாறு காணாத தோல்விக்கு யார் காரணம் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்த மக்களவைத் தேர்தலில்,  திமுக கூட்டணி 38 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணியில், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தை போன்ற கட்சிகள் தனி சின்னத்திலும், மதிமுக, ஐ.ஜே.கே, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்ற கட்சிகள் திமுகவின் “உதய சூரியன்” சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 23 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மாபெரும் வெற்றி மூலம் திமுக தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

அதிமுகவின் கோட்டை எனக் கருத்தப்பட்ட கொங்குமண்டலத்தை திமுக இந்தத் தேர்தலில் தகர்த்துள்ளது. மேலும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ஆகிய இடங்களை திமுக கூட்டணி கட்சிகள் தன்வசப்படுத்தியுள்ளன. 

அதிமுகவுக்கு ஒரே ஆறுதலாக தேனி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் வெற்றி பெற்றார். தேனியில் அமமுக பெரிய  போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிமுகவின் ஓட்டுகளை அமமுக நிச்சயம் பிரிக்கும் என்பதால் இது திமுக கூட்டணியான காங்கிரசுக்கு பலமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. 

ஆனால் தேனி தொகுதியில் போட்டியிட்ட அமமுகவின் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுகவுக்கு பெரிய போட்டியாக இருக்கவில்லை என்பதையே தேர்தல் முடிவு காட்டியுள்ளது. தேனி தொகுதியில் அதிமுக பெற்ற வெற்றிக்குறித்து தி இந்து ஆங்கில நாளிதழுக்குப் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் பெரியசாமி, தேனியில் அதிமுகவின் வெற்றி மர்மமாகவே இருக்கிறது. அதிகாரிகளின் உதவியால் இந்த வெற்றியை அதிமுக அடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆனாலும் முதலமைச்சர், அமைச்சர்கள் சிலர் எனப் பலருக்கும் சொந்த ஊரான தென் மாவட்டங்களில் அதிமுக ஜொலிக்க முடியாமல் போனதை அரசியல் வட்டாரங்கள் கவனிக்கத்தவறவில்லை. பாஜகவுடனான கூட்டணியே இந்தத் தோல்விக்கு காரணம் என்று சிலர் கருத்து தெரிவித்தாலும், திமுகவுடன் கூட்டணி வைத்த கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

தென் மாவட்டங்களில் அதிமுகவின் வீழ்ச்சி குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் திருமலை, எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத அதிமுகவை ஏற்க தென் மாவட்டங்கள் மறுப்பதையே இந்தத் தேர்தல் முடிவு காட்டுவதாக தெரிவித்தார்.

திமுகவின் வெற்றி குறித்து பேசிய பேராசிரியர் ஒருவர், பாஜகவுக்கு எதிரான மனநிலையே திமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, புயலில் பாதிக்கப்பட்டவர்களை மத்திய அரசு அணுகிய விதம் ஆகியவை பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுகவுக்கு எதிராக அமைந்துவிட்டது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றால் கூட நாகர்கோவில், ராமநாதபுரம்,தூத்துக்குடி, தென்காசி ஆகிய இடங்களில் அதிமுக கடுமையான நெருக்கடியை திமுகவுக்கு கொடுத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close