[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

அம்மாவுக்கு ஆதரவாக நடிகை சோனாக்‌ஷி பிரசாரம்!

sonakshi-sinha-to-canvass-for-mother-poonam-sinha-in-lucknow

லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி வேட்பாளர் பூனம் சின்ஹாவை ஆதரித்து அவர் மகளும் நடிகையுமான சோனாக்‌ஷி சின்ஹா இன்று பரப்புரையில் ஈடுகிறார். 

தமிழில் ரஜினி ஜோடியாக ’லிங்கா’ படத்தில் நடித்தவர் இந்தி நடிகை, சோனாக்‌ஷி சின்ஹா. இந்தி நடிகரும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர், இப்போது ’தபாங் 3’ படத்தில் சல்மான் கானுடன் நடித்து வருகிறார். 

இவர் தந்தை சத்ருகன் சின்ஹா, பாஜகவில் இருந்து விலகி சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பீகார் மாநிலம் பாட்னா சாகிப் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில், போட்டியிடுகிறார். இவர் மனைவி, பூனம் சின்ஹா. நடிகையான இவர், கடந்த மாதம் 16 ஆம் தேதி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். இவர் லக்னோ மக்களவைத் தொகுதியில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்நிலையில், தனது அம்மாவுக்கு ஆதரவாக, நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இன்று லக்னோவில் இருந்து நடைபெறும் பிரசாரப் பேரணியில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close