[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

வேலூரில் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரைக்கவில்லை: வருமான வரித்துறை!

income-tax-department-explains-about-vellore-election-issue

வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது குறித்து எந்த பரிந்துரையும் செய்யவில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் கடந்த மாதம் 29 மற்றும் 30 ஆம் தேதிக‌ளி‌ல் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின்போது முக்கிய ஆவணங்களும், 10 லட்ச ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இம்மாதம் 1 மற்றும் 2ஆ‌ம் தேதிகளில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையின் போது துரைமுருகனுக்கு நெருங்கிய நண்பரும் திமுக பகுதி செயலாளருமான பூஞ்சோலை சீனிவாசனின் ‌சகோதரி வீட்டிலிருந்‌து 11 ‌கோடியே 48 ‌லட்ச ரூபாய் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல்‌ செய்யப்பட்டது‌. அதைத் தொடர்ந்து கதிர் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டுக்கட்டாக பணம் சிக்கியதால் வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

 ஆனால், தேர்தலை நிறுத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்தது.

இதற்கிடையே, வருமான வரித்துறையும் இன்று விளக்கம் அளித்துள்ளது. அதில், தேர்தலை ரத்து செய்வது குறித்து எந்த பரிந்துரையும் வரு மான வரித்துறை செய்யவில்லை. இந்த சோதனை குறித்து 5 முறை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்ததாகவும் அதில் தேர்தலை நிறுத்துவது குறித்து எந்த பரிந்துரையையும் செய்யவில்லை என்றும் ஒருபோதும் அதுபோன்ற பரிந்துரையை வருமான வரித்துறை செய்யாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close