[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

அமோகமாக நடைபெறும் பணப் பட்டுவாடா -  ‘அலர்ட்’ ஆன தேர்தல் பறக்கும் படை 

flying-squads-arrest-admk-worker-for-bribing-voters

வேலூர் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து கொண்டிருந்த அதிமுக பிரமுகர் சம்பத் என்பவரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தற்போது பணப்பட்டுவாடா குறித்த அதிக புகார்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும், காவல்துறையினரும் பணப்பட்டுவாடாவை தடுக்க அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் வேலூரில் பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுக பிரமுகர் ஒருவரை பிடித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு ராணிப்பேட்டை பகுதியில் அதிமுக பிரமுகர் சம்பத் என்பவர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரி ஜீவானந்தம் தலைமையிலான அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அதிமுக பிரமுகர் சம்பத்திடமிருந்து ரூ. 1 லட்சத்து 58 ஆயிரம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

(கோப்புப்படம்)

பறிமுதல் செய்யப்பட்ட பணம் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் பணப்பட்டுவாடா குறித்து சம்பத்திடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குரிசிலாப்பட்டியைச் சேர்ந்த கோபி மற்றும் மரிமானிகுப்பம் பகுதியைச் சேர்ந்த மேகநாதன் ஆகிய அதிமுக பிரமுகர்களையும் பணப்பட்டுவாடா செய்ததாக பறக்கும்படை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து  பட்டுவாடாவுக்காக வைத்திருந்த 38 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

(கோப்புப்படம்)

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 14, 15, 16 வார்டுகளில் பணப்பட்டுவாடா நடப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் மூன்று பறக்கும் படை அதிகாரிகள் குழு வீடுவீடாக சென்று அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.

அதேபோல் ஈரோட்டை அடுத்த ஆர்.என். புதூர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடம் விசாரணை நடத்தி ஆய்வில் ஈடுபட்டனர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close