[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு!

actress-kushbu-tweet-about-sellur-raju-s-worst-comments

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும், நட்சத்திர பேச்சாளர்களும், நடிகர், நடிகைகளும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு மதுரை உசிலம்பட்டியில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.

இது பற்றி பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ “வைகை ஆற்றில் எருமை மாட்டை குளிப்பாட்டினால் கூட கூட்டம் கூடும் என்றும், நடிகர் நடிகைகளின் பிரச்சாரத்துக்கு கூடும் கூட்டம் வாக்காக மாறாது என்றும் பேசினார். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் குஷ்புவின் வயதை காட்டி அருவருக்கும் வகையிலான கருத்துகளையும் தெரிவித்தார். இது அங்கிருந்தவர்களை முகம் சுழிக்கச் செய்தது. 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்விட்டரில் பதிலளித்துள்ள குஷ்பு “நம்ம அதிமுக ‘விஞ்ஞானி தெர்மாகோல் ராஜு’வுக்கு வயது ஆகிவிட்டதுன்னு நல்லா தெரியுது...பாவம் என்னென்னமோ பேசிக் கொண்டிருக்காரு..எனக்காக கூடும் கூட்டத்தை, அதிமுகவை சேர்ந்தவர்களும் கவனித்து வருவதற்கு நன்றி..நான் திரைத்துறையிலிருந்து விலகி 30 ஆண்டுகளாகியும், என்னால் இவ்வளவு மக்களை சேர்க்க முடிகிறது... உண்மையிலேயே தமிழக மக்களுக்கு நான் மிகவும்
நன்றிக் கடன்பட்டுள்ளேன்”
என்று தெரிவித்துள்ளார். 

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close