[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

“வருமான வரித்துறை மிரட்டலுக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல”- மு.க.ஸ்டாலின்

we-are-not-fear-for-income-tax-raid-mk-stalin

தேர்தலில் படுதோல்வி அடையப் போகிறோம் என்கிற பயத்தால் தி.மு.கவை சீண்டிப் பார்க்கிறார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த 29-ம் தேதி திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய நிலையில், திமுகவினருக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் இன்று சோதனை நடைபெற்று வருகிறது. இன்று காலை முதலே காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள திமுக பகுதிச் செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். கீழ்மேட்டூர் பகுதியில் உள்ள சீனிவாசனின் சகோதரியின் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.

காட்பாடி வஞ்சூர் பகுதியிலுள்ள திமுக ஒன்றியச் செயலாளர் பெருமாள் என்பவருக்குச் சொந்தமான வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திமுகவின் வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த்திற்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதனிடையே சிமெண்ட் குடோனிலிருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பணம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மிஷினை வைத்து பணத்தை எண்ணும் பணியும் தற்போது தொடங்கியுள்ளது. திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 10 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமான வரித் துறையினர் கூறினர்.

 

இந்நிலையில் தேர்தலில் படுதோல்வி அடையப் போகிறோம் என்கிற பயத்தால் தி.மு.கவை சீண்டிப் பார்க்கிறார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “ தமிழகத்தில் காலூன்ற முடியாததால், வருமான வரித்துறை, சி.பி.ஐயைக் கொண்டு அ.தி.மு.கவை மிரட்டி அடிபணிய வைத்தது பா.ஜ.க அரசு. இப்போது தேர்தலில் படுதோல்வி அடையப் போகிறோம் என்கிற பயத்தால் தி.மு.கவை சீண்டிப் பார்க்கிறார்கள். உங்கள் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல” என கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close