[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

“ராகுலின் திட்டத்தால் ஏழைகள் நாட்டின் எஜமானர்கள் ஆவார்கள்” : மு.க.ஸ்டாலின் அறிக்கை

mk-stalin-says-rahul-s-project-is-the-poor-are-the-masters-of-the-country

ராகுல்காந்தியின் ஏழைகளுக்கான குறைந்த பட்ச ஊதிய உறுதித்திட்டத்தால் ஏழைகள் இந்த நாட்டின் எஜமானர்கள் என்ற நிலை தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியால் உருவாகும் என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தி அறிவித்துள்ள குறைந்தபட்ச வருவாய்த் திட்டம் குறித்து அறிக்கை வெளிட்டுள்ளார். அதில் “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழைகளுக்கும் மாதம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் குறைந்த பட்ச ஊதிய உறுதித்திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் திட்டத்தை திமுகவின் சார்பில் மனமார வரவேற்கிறேன். 

Image result for Rahul Gandhi

ராகுல் காந்தியின் “குறைந்த பட்ச ஊதிய உறுதித் திட்டம் மூலம் 25 கோடி ஏழைகள் மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு 72, 000 ரூபாய் பெறுவார்கள்” என்ற அறிவிப்பு பா.ஜ.க.வின் பாசிச ஆட்சியில் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்ற ஏழைகளுக்கு ஏற்ற வரப்பிரசாதம் மட்டுமல்ல - ஒரு அட்சய பாத்திரமாக கண்ணுக்குத் தெரிகிறது. “ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்றார் பேரறிஞர் அண்ணா! அதை ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் திருமண நிதியுதவி உதவித்திட்டம், வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதாந்திர ஊதியம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் தமிழகம் கண்டிருக்கிறது.

சமூக நலத்திட்டங்கள் மூலம் ஏழைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியே ஒரு நாட்டிற்குத் தேவையான முதுகெலும்பு என்று நிரூபித்துக் காட்டியவர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த தலைவர் கருணாநிதி. அதுபோல் இப்போது ராகுல் காந்தியால் அறிவிக்கப்பட்டுள்ள “நியாய” (ஏழைகளுக்கு நீதி வழங்கும்) திட்டத்தால் தமிழகத்தில் மட்டுமல்ல- இந்தியாவில் உள்ள ஏழைகளின் முகத்தில் ஐந்து வருடம் கழித்து இப்போதுதான் சிரிப்பைக் காண முடிகிறது.

Related image

இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று பா.ஜ.க.வினர் விதண்டாவாதம் செய்கிறார்கள். ஏன் நிதி அயோக்கின் துணை தலைவராக இருக்கும் ராஜீவ் குமார் பா.ஜ.க. பிரச்சாரகராகவே மாறி “செயல்படுத்த முடியாத திட்டம்” என்று சொல்கிறார். இது எரிச்சலின் வெளிப்பாடே தவிர துளியும் உண்மை அல்ல! “விவசாயக் கடன் தள்ளுபடி செய்வோம்” “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தை நிறைவேற்றுவோம்” என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்பு அறிவித்த போதும் பா.ஜ.க.வினர் இதே போன்று விஷமப் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தி.மு.க.வும் பங்கேற்றிருந்த நேரத்தில் 72 ஆயிரம் கோடி விவசாயக் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டது.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டமும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

ஆகவே, ஏழைகளுக்கான இந்த குறைந்த பட்ச ஊதிய உறுதித்திட்டத்திற்கான நிதி ஆதாரத்தை திரட்டி, திராவிட முன்னேற்றக் கழக - காங்கிரஸ் கூட்டணியால் வெற்றிகரமாக நிறைவேற்றிக்காட்டிட முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. முதன்முறையாக இந்தியாவில் கொண்டு வரப்படும் இந்தத் திட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் இதயபூர்வமான ஆதரவினைத் தெரிவித்து, ஜூன் மூன்றாம் தேதிக்குப் பிறகு ஏழைகள் இந்த நாட்டின் எஜமானர்கள் என்ற நிலை தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியால் உருவாகும் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close