வட சென்னையில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மைக்கை பயன்படுத்தியது அனைவரையும் கவர்ந்துள்ளது.
அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜூக்கு ஆதரவாக திருவொற்றியூரில் முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். கடந்த சில நாட்களாக முதலமைச்சர் பரப்புரையின்போது, சாதாரண வகை மைக்கை பயன்படுத்தி வந்த நிலையில், இன்று நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மைக்கை முதலமைச்சர் பழனிசாமி பயன்படுத்தினார். காதில் பொருத்திக்கொள்ளும் வகையிலான மைக்கை முதலமைச்சர் பழனிசாமி பயன்படுத்தியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
இதுபோன்ற மைக்கை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தெலுங்கு சேதம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முதலமைச்சருமான சந்திர பாபு நாயுடு ஆகியோர் உரையின் போது பயன்படுத்தியுள்ளனர். பேசும் ஒலி துல்லியமாக கேட்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மைக்கை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி
ஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்
இனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு
ஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..!
பாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு