[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் 68 பேர் கைது- தூத்துக்குடி காவல்துறை
  • BREAKING-NEWS வடகொரியாவுடன் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை ரத்து - அமெரிக்கா
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட வாய்ப்பு இல்லை; அரசின் எண்ணமும் அதுதான் - ஆட்சியர் சந்தீப் நந்தூரி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து பெங்களூருவில் உள்ள வேதாந்தா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள்
  • BREAKING-NEWS அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம்- ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால்
  • BREAKING-NEWS தூத்துக்குடி அண்ணாநகரில் ஆயுதம் ஏந்திய 100க்கும் மேற்பட்ட கமாண்டோ படை வீரர்கள், 500க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பு
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் பிரேத பரிசோதனை அறிக்கையை மே 30ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்

திருச்சி என்ஐடி மாணவர் சேர்க்கையில் முறைகேடு: முன்னாள் தற்காலிக பேராசிரியர் குற்றச்சாட்டு

former-proffessor-accuses-scam-in-nit-trichy

திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகத்தில் பிஎச்டி எனப்படும் ஆராய்ச்சி மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் தற்காலிகப் பேராசிரியர் குற்றம்சாட்டி இருக்கிறார்.

திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகத்தில் தற்காலிக பேராசிரியராக பணியாற்றிய கார்த்திக் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கை தேர்வு ஒரு தலைப்பட்சமாக நடைபெறுவதாகவு‌ம், எழுத்துத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நேர்காணலில் அதிக மதிப்பெண் வழங்கப்படுவதாகவும் கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார். முதலில் பென்சிலில் எழுதப்படும் மதிப்பெண்கள் பிறகு பட்டியலை சரிபார்த்து மாற்றப்படுகிறது என கூறும் கார்த்திக், ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கும் தொகையிலும் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

கல்லூரியில் நடைபெறும் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததால் தனக்கான பணி கால நீட்டிப்பு வழங்கப்படவில்லை எனவும் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close