[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

ஆசிரியர்களுக்கென 'புதிய வெர்சுவல் ஸ்டாப் ரூம்' : அமேசான் அறிமுகம்

amazon-launches-new-virtual-staff-room-for-teachers

ஆசிரியர்களுக்கென்றே பிரத்யேகமான ‘புதிய வெர்சுவல் ஸ்டாப் ரூமை (New Virtual Staff Room ) அமேசான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்கா முழுவதும் உள்ள ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் வகையில் ‘அமேசான் இன்ஸ்பெயர்’ என்ற பெயரில் புதிய வெர்சுவல் ஸ்டாப் ரூமை அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை , தங்களிடம் உள்ள புத்தக தகவல்கள் குறித்தும், ஆய்வுகள் மற்றும் பிற தகவல்கள் குறித்தும் இருந்த இடத்தில் இருந்தபடியே பகிரிந்து கொள்ளலாம்.

இந்த புதிய முறையின் மூலம் ஆசிரியர்கள் பாடவாரியாக தகவல்களை பெற முடியும், கற்பிக்கும் முறை குறித்த தங்கள் யோசனைகளை குழுவாக ஆசிரியர்கள் பகிர்ந்து கொள்ளலாம். அமேசான் அறிமுகம் செய்துள்ள புதிய வெர்சுவல் ஸ்டாப் ரூமுக்கு நியூயார்க்கில் உள்ள மினோலோ பப்ளிக் பள்ளி தகவல்களை கொடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த பள்ளியின் மேலாளர் கூறுகையில் ‘நவீன டிஜிட்டல் உலகில் பொதுக்கல்வியை மாணவர்களுக்கு எளிதாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறோம். அமேசான் இன்ஸ்பெயரில் அதிகப்படியாக ஆசிரியர்கள் தங்கள் தகவல்களை பகிர வேண்டும். இதன் மூலம் மற்ற ஆசிரியர்கள் உயர்ந்த தர கல்வியை கண்டுபிடிக்க முடியும். மிகத்தரம் வாய்ந்த வகுப்பறை மெட்டீரியல்களை பெற முடியும்’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close