[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது: விருதுநகர் சிவகுமார், நாமக்கல் பிரேமசுதா 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம்

tamil-nadu-sslc-results-out-all-details-you-need-to-know

தமிழகம், புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தமிழகத்தில் 93.60 சதவிகித மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ஆம் வகுப்பு தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் பெரியவள்ளிகுளம் நோபல் பள்ளியைச் சேர்ந்த சிவக்குமார், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.வி எக்ஸல் பள்ளியைச் சேர்ந்த பிரேமசுதா ஆகிய இருவரும் முதலிடம் பெற்று சாதனை படைத்திருக்கின்றனர்.

498 மதிப்பெண்களுடன் 50 பேர் மாநில அளவில் 2-ஆம் இடம் பிடித்துள்ளனர். 497 மதிப்பெண்களுடன் 224 பேர் மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவிகளும் மாநில அளவில் 2-ஆவது மற்றும் 3-ஆவது இடங்களைப் பிடித்து சாதனை படைத்திருக்கின்றனர்.

10-ஆம் வகுப்புத் தேர்வில் ஒட்டுமொத்தமாக 93.60 சதவிகித மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு தேர்ச்சியை விட சற்று அதிகமாகும். இந்த ஆண்டும் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடமும் வேலூர் கடைசி இடமும் பெற்றுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close