[X] Close
JUST IN
 • BREAKING-NEWS பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து ஆர்.கே. நகரில் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா ஆய்வு
 • BREAKING-NEWS ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ரூ.100 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்ததாக ஸ்டாலின் புகார்
 • BREAKING-NEWS ஆர்.கே. நகரில் டிடிவி தினகரன் ஆதரவாளரிடமிருந்து ரூ. 20 லட்சம் பறிமுதல்
 • BREAKING-NEWS ஒகி புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை இன்று மத்திய அரசுக்கு அனுப்புகிறது தமிழக அரசு
 • BREAKING-NEWS கொளத்தூர் செல்லப்பிள்ளை என்றாலும் ஆர்.கே. நகரை வளர்ப்புப் பிள்ளையாக கருதி வளர்ச்சிபெற வைப்பேன் - மு.க. ஸ்டாலின்
 • BREAKING-NEWS பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சென்னை ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநிலம் போலீசார் வழக்குப்பதிவு
 • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்த வேண்டும்- ப. சிதம்பரம்
 • BREAKING-NEWS நாகை: கடல் சீற்றத்தால் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 2ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
 • BREAKING-NEWS கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசித் தாக்குதல்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கக்கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுகவினர் புகார் மனு
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த சதி நடைபெறுகிறது: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் மக்கள் டிடிவி தினகரனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS நாகையில் போராட்டம் நடத்த வந்த ஹெச்.ராஜாவை வஞ்சியூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்
 • BREAKING-NEWS பணப்பட்டுவாடா செய்தால் தேர்தலை ரத்து செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: திருமாவளவன்
கல்வி & வேலைவாய்ப்பு 26 Feb, 2017 05:13 PM

நீட் தேர்வு இதுவரை

neet-exam-hurdles

நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேசமயம் நீட் தேர்விற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வினை தமிழக மாணவர்கள் எழுத வேண்டுமா? வேண்டாமா என்ற குழப்பம் இதுவரை நீடித்து வருகிறது.

நீட் தேர்வு:

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வாக ‘நீட்’ பொது நுழைவுத் தேர்வினை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நீட் தேர்வானது தமிழக கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்பதால்தான், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இந்த சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரும் கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.

இதனிடையே, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2017-2018-ம் கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே மாதம் 7-ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் மாதம் 1-ம் தேதி என்ற காலக் கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்வி கேட்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால், பிராந்திய மொழிகளில் படித்த மாணவர்களுக்கு இத்தேர்வினை எழுதுவதில் சிரமம் ஏற்படும் என்று கூறி பல்வேறு மாநில அரசுகள் நீட் தேர்விக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, மத்திய அரசு தமிழ், ஆங்கிலம், வங்காளம், மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, ஹந்தி, அஸ்ஸாமி ஆகிய 8 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது.

நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வகை செய்து, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்க ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா கோரிக்கை விடுத்திருந்தார்.தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என பிரதமர் நரேந்திர மோடியை நாளை நேரில் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தவுள்ளார். குடியரசுத் தலைவர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தால் தான் அது சட்டமாக நிறைவேற்றப்படும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுதும் கட்டாயம் ஏற்படலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close