[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு? - மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS தோனியிடம் தேர்வுக்குழு பேச வேண்டும்: ஓய்வு விவகாரம் பற்றி சேவாக்!
  • BREAKING-NEWS கடத்தப்பட்ட குழந்தை '10 மணி' நேரத்தில் மீட்பு - வீட்டு பணிப்பெண் காதலனுடன் கைது
  • BREAKING-NEWS டி.என்.பி.எல். தொடர் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS விடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா

குரூப் 1 தேர்வு எப்போது?.. டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

group-1-exam-details

தமிழகம்‌ முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில், முன்னெப்போதும் இல்லாத அ‌ளவிற்கு 15 லட்சத்து 64 ஆயிரத்து 471 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

சென்னை குரூப் 1 தேர்விற்கான அறிவிப்பு வரும் 9ம் தேதி வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார். தமிழகம்‌முழுவதும் குரூப் 4 தேர்வுகள் நடைபெற்று வருகினறன. 15 லட்சத்து 64 ஆயிரத்து 471 பேர் இந்த தேர்வை எழுதி வருகின்றனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் தேர்வு நடைபெறும் மையம் ஒன்றை ஆய்வு செய்த டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 85 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு வரும் 9ம் தேதி வெளியாகும் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பினை தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இளையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை எழுதுபவர்கள் இணையதளத்தில் ‌நாளை அறிவிக்கப்பட உள்ள திருத்தியமைக்கப்பட்ட வரையறையை தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close