[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

ஹெச்.ஐ.வி வைரஸ் பாதித்த தம்பதி ... ஊரை வீட்டு ஒதுக்கி வைத்திருக்கும் கிராமம்

couples-affected-with-hiv-virus-village-town-home-and-set-aside

காஞ்சிபுரம் மாவட்டத்தில், “ஹெச் ஐ வி” வைரசால் பாதிக்கப்பட்ட தம்பதியை, கிராம மக்கள் ஒதுக்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது குறித்து மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த தம்பதி புகார் தெரிவித்திருக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருமணி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகரைச் சேர்ந்தவர்கள் ராதா கண்ணன், காந்தா தம்பதி. ஹெச் ஐ வி வைரசால் பாதிக்கப்பட்ட இருவரும் திருமணம் செய்து கொண்டு கடந்த 7 வருடங்களுக்கு முன்னால் இப்பகுதியில் குடியேறினர். சிறிது காலத்தில் இவர்களது உடல்நிலை குறித்து அறிந்த அப்பகுதி மக்கள், வீட்டை காலி செய்து ஊரை விட்டு வெளியேறுமாறு தம்பதியை தொடர்ந்து நிர்பந்தித்து வருகின்றனர்.

கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஊர் மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இவர்கள் மீது தற்போது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தனது வீட்டிற்கு செல்லும் பொதுப் பாதையை மறித்து தங்களை தனிமைப்படுத்தி இருப்பதாக வருத்தம் தெரிவிக்கும் காந்தா, ஹெச்.ஐ.வி கிருமியின் பாதிப்பை விட மக்களின் செயல்பாடுகளே மிக கொடுமையாக இருப்பதாக கண்ணீர் சிந்துகிறார்.

தங்களுக்கான அடிப்படை வசதிகள் எதையுமே நகராட்சி நிர்வாகம் செய்துதரவில்லை என குற்றம்சாட்டும் ராதா கண்ணன், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரே தனது வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டதாக கூறுகிறார்.

அக்கம் பக்கத்தினர் யாரும் தங்களுடன் பேசுவதில்லை என வேதனை தெரிவிக்கும் அவர், ஹெச் ஐவியால் பாதிக்கப்பட்டதினால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதோடு, குறைந்தபட்ச மரியாதையை கூட இந்த கிராம மக்கள் கொடுப்பதில்லை என்றும் கூறுகிறார்.

ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் கூட குடும்பத்துடன் சந்தோஷமாய் வாழலாம் என மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தங்களை, அதை காரணமாக வைத்தே சமுதாயம் புறக்கணிக்கிறது என்று வேதனை தெரிவிக்கிறார் ராதா கண்ணன்.

இது குறித்து திருமணி ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது தனது செலவில் அவர்களுக்கு குடிநீர் இணைப்பு ஏற்படுத்தி கொடுப்பதாக தெரிவித்திருக்கிறார். அப்பகுதியில் நேரடி ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக செங்கல்பட்டு கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் உறுதியளித்திருக்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close