திருவாரூர் மாவட்ட குடியிருப்பு பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் குழாய் அமைக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், தற்போது, தற்காலிமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், அப்பகுதி மக்கள் ஒஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக திருவாரூர் மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தகவல் அறிந்த திருவாரூர் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கும், மாவட்ட வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள்: 6 இடங்களில் பாஜக முன்னிலை
மக்களவையில் இன்று தாக்கலாகிறது குடியுரிமை திருத்த மசோதா !
உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு முதல்... வெஸ்ட் இண்டீஸ் வெற்றி வரை..
“சிறார் ஆபாச படங்களை பரப்பும் 3 குழுக்கள் கண்டுபிடிப்பு” - காவல்துறை
புதைத்து வைத்த 110 சவரன் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் - மாமனார், மருமகளின் நாடகம்