[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

சென்னை, நாகை துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு: மீனவர்களுக்கு எச்சரிக்கை

naagai-storm-warning

நாகை மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், புயல் பாதுகாப்பு மையங்கள் திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுப்பணித்துறை, மின்வாரியம், தீயணைப்பு படை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். மின்விநியோக பாதிப்புகளையும் உடனுக்குடன் சீர் செய்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close