[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

திருவள்ளூரில் அடுத்தடுத்து 6 வீடுகளில் நகை, பணம் கொள்ளை

gold-robbery-from-six-houses-near-tiruvallur

திருவள்ளூரில் அடுத்தடுத்து 6 வீடுகளில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

சுண்ணாம்பு குளம் பகுதியில் நடேசன் என்ற மருத்துவரின் வீட்டு பூட்டை உடைத்து 60 சவரன் நகை, 70ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த 5 வீடுகளிலும் கொள்ளை நடந்துள்ளது. அந்த வீடுகளில் கொள்ளைப்போன பொருட்களின் மதிப்பு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல், ஆண்டார்குப்பம் பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியின் பூட்டை உடைத்து 5ஆயிரம் ரூபாய், மடிக்கணினியும், அருகில் இருந்த வீட்டில் 5 சவரன் நகை மற்றும் 2 வெள்ளி குத்துவிளக்குகளையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர்.

ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close