[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா
  • BREAKING-NEWS பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி

ஏ.டி.எம். கேமராவை ஹேக் செய்து கொள்ளை: சென்னையில் சிக்கிய கொள்ளையர்கள்!

kolkata-police-arrest-3-atm-thieves-in-chennai

2ஜி, 3ஜி, 4ஜி என தொழில்நுட்பங்கள் முன்னேறுவது போல, கொள்ளையர்களும் முன்னேறி வருகின்றனர். ஏ.டி.எம். இயந்திரங்களில் ஸ்கிம்மர், பின் ஹோல் கேமரா போன்றவற்றைப் பொருத்தி வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களை திருடி வந்தவர்கள் இப்போது பாதுகாப்புக்காக ஏ.டி.எம். மையத்தில் வங்கி வைத்திருக்கும் சிசிடிவி கேமராவையே ஹேக் செய்யும் அளவிற்கு முன்னேறிவிட்டனர். அப்படிப்பட்ட கில்லாடி கொள்ளையர்கள் மூன்று பேர் சென்னையில் சிக்கியுள்ளனர். 

சேப்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தவர்களை கொல்கத்தா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிடிபட்ட விஜயகுமார் மண்டல், ஜுஹேந்தர்குமார் மண்டல், பாஸ்கர் குமார் ஆகியோர் ஜார்க்கண்ட் ‌மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் கூட்டாளி இரு தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் சிக்கினார். முக்கிய குற்றவாளியான அவர் கொடுத்த தகவலின் பேரிலேயே சென்னையில் இருந்தவர்களை மடக்கியது கொல்கத்தா காவல்துறை. இந்தக் கும்பல் கொள்ளையை அரங்கேற்றும் விதமே வித்தியாசமானது. 

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இருக்கும் ஏ.டி.எம். மையங்களில் இருந்து வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களை திருடும் இவர்கள், அதை வைத்து போலி ஏ.டி.எம். கார்டு தயாரிப்பாளர்கள். எந்த மாநிலத்தில் விவரங்களை திருடினார்களோ அங்கே பணத்தை கொள்ளையடிக்க மாட்டார்கள். அங்கிருந்து வேறு மாநிலத்திற்குச் சென்று தாங்கள் தயாரித்த போலி ஏ.டி.எம். கார்டு மூலம் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடிப்பார்கள்.

திருட்டை முடித்த கையோடு திரும்பிக்கூட பார்க்காமல் அங்கிருந்து வேறு மாநிலத்திற்குச் சென்று விடுவார்கள். பல மாநில காவல்துறையினர் இவர்களை தேடி அலைந்தனர். தகவலறிந்து காவல்துறையினர் வருவதற்குள் இவர்கள் வேறு மாநிலத்திற்குச் சென்று விடுவார்கள். இப்படியே மாநிலம் விட்டு மாநிலம் தாவியவர்கள் சென்னையில் பிடிபட்டனர். 

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்து 3 பேரிடமும் கொல்கத்தா காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கழிவறைக்குச் செல்வதாகக் கூறிச்சென்ற பாஸ்கர் குமார் என்பவர் காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடிவிட்டார். அவரை கண்டுபிடித்து தரும்படி திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது கொல்கத்தா காவல்துறை. 

வங்கிக்கே தெரியாமல் ஏ.டி.எம்.மில் உள்ள சிசிடிவி கேமராக்களை கொள்ளைக்கும்பல் ஹேக் செய்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close