[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

திருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்

tn-villagers-mistake-three-youths-for-thieves-kill-one-of-them

திருடன் என நினைத்து கல்லூரி மாணவனை பொதுமக்கள் கல்லால் அடித்துக் கொன்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில்தான் இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தென்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். கல்லூரி மாணவர். இவரது நண்பர் ஆனந்தன். வெளியில் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீட்டிற்கு திரும்ப பேருந்து இல்லாததால் தனது நண்பரான சதாசிவத்தை பைக் எடுத்து வரும்படி அழைத்திருக்கிறார் ஆனந்தன். அதன்பேரில் சதாசிவம் தனது மற்ற இரு நண்பர்களான மாதவன் மற்றும் யுவராஜ் ஆகியோரை அழைத்துக் கொண்டு ஆனந்தனை அழைக்க சென்றிருக்கிறார். அவர் அழைக்கச் சென்ற நேரம் நள்ளிரவு 12.30 மணி இருக்கும். நண்பர்கள் மூவரும் ஒரே பைக்கில் சுமங்கலி கிராமம் வழியாக சென்றிருக்கின்றனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், இளைஞர்கள் மூவர் பைக்கில் சென்றதை பார்த்ததும் அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றிருக்கின்றனர். சதாசிவம் தான் பைக்கை ஓட்டியிருக்கிறார். தங்களை அவர்கள் ஏன் தூரத்துகிறார்கள்..? என்பதை அறியாத சதாசிவம் வண்டியை வேகமாக ஓட்டியிருக்கிறார். ஆனால் பைக்கை துரத்திய பொதுமக்கள், உடனடியாக ஊரின் மற்ற மக்களுக்கும் தகவல் தெரிவிக்க ஊரின் மறுபுறத்தில் நின்ற பொதுமக்கள் சதாசிவம் ஓட்டிய பைக் மீது சரமாரியாக கற்களை வீசியிருக்கின்றனர். இதில் பைக் ஓட்டிய சதாசிவத்தின் தலை, நெஞ்சு என பல இடங்களில் கற்கள் பட்டு காயம் ஏற்பட்டிருக்கிறது. அதோடு மட்டுமில்லாமல் வண்டியின் பின்னால் இருந்த சதாசிவத்தின் மற்ற இரு நண்பர்கள் மீதும்  கற்கள் விழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் சதாசிவத்தின் மீது அதிக கற்கள் விழுந்ததால் அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்து மயக்கம் அடைந்தார். இதனையடுத்து நண்பர்கள் அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஆனால் சதாசிவம் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சுமங்கலி கிராமத்தில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. இதனால் ஊர் மக்கள் நள்ளிரவு நேரத்தில் அவர்களாகவே ரோந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது அவ்வழியாக செல்லும் நபர்களை பிடித்து விசாரிப்பதும் வழக்கமாம். அதனைப்போலதான் நள்ளிரவு நேரத்தில் ஊருக்குள் பைக்கிள் சென்ற சதாசிவம் உள்பட 3 பேரை மறித்திருக்கின்றனர். ஆனால் அவர் நிற்காமல் சென்றவுடன், கொள்ளைக்காரர்கள் என நினைத்து ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கற்களை வீசி அந்த மாணவரை கொன்றிருக்கின்றனர். இதனையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக 7 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சதாசிவத்தை கொன்ற நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது உறவிகர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close