[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

மனைவியை தீ வைத்து கொல்ல முயற்சி: கணவன் கைது

woman-set-on-fire-by-husband-over-family-dispute

தெலங்கானாவில் குடும்ப பிரச்னை காரணமாக கணவனே மனைவி மீது தீ வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஐதராபாத்தை சேர்ந்தவர் மல்லேஷ் கவுட் (53). இவரது மனைவி மங்கம்மா (48). இவர்களுக்கு திருமணம் ஆகி 32 வருடங்கள் ஆகிறது. இந்தத் தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மல்லேஷ் கவுட்க்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி கணவன் மனைவி இடையே சண்டை ஏற்படும் எனத் தெரிகிறது. 

இந்நிலையில் நேற்று மது அருந்தி வந்த மல்லேஷ் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். குழந்தைகள் இருந்த அறையை தாழிட்டவர், மனைவி மங்கம்மாவை  தீ வைத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். மங்கம்மா மீது தீ வைத்துட்டு அந்த அறையை தாழிட்டு தப்பியோடி விட்டார். மங்கம்மாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதையடுத்து மல்லேஷ் கவுட் கைது செய்யப்பட்டுள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close