[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

கருக்கலைப்பு செய்ததில் மாணவி உயிரிழப்பு

student-death-in-abortion

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே போலி மருத்துவர் கருகலைப்பு செய்ததால் இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். 

பொம்மியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு போலி மருத்துவர் சுல்தானா ஒருவாரத்திற்கு முன் கருக்கலைப்பு செய்துள்ளார்.அதில், மாணவியின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். அதனையடுத்து, போலி மருத்துவர் சுல்தானாவிடம் மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறை இணை இயக்குநர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. அதில், சகோதரராலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் மாணவியை அவரது சகோதரர் போலி மருத்துவர் சுல்தானாவிடம் அழைத்துச்சென்று கருக்கலைப்பு செய்ததும் உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து போலி மருத்துவர் சுல்தானா, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அவரை கருக்கலைப்புக்கு அழைத்துச்சென்ற அவரது சகோதரர் ஹரிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close