[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

தொடர் பைக் திருட்டு: 6 இளைஞர்கள் கைது

6-youths-arrested-in-chennai-for-bike-theft

சென்னையில் தொடர் பைக் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அயனாவரம் பகுதியில் கடந்த சில நாட்களாக சாலையில் நடந்து செல்வோரிடம், செல்போன், தங்கச்சங்கிலி‌கள் பறிக்கும் சம்பவங்கள் பெருகிவிட்டதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. வாகன சோதனையின்போது, 6 பேர் கொண்ட கும்பலை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். முன்னுக்குபின் முரணாக பதில் அளித்த கும்பலிடம் விசாரணையை தீவிரப்படுத்தியபோது, செல்போன் மற்றும் நகைப்பறிப்பு செய்தது தெரியவந்தது.

இவர்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் கிடைத்துள்ளன. இதன்படி, வெளியே நிறுத்திவைக்கப்பட்டுள்ள பைக்குகளை கள்ளச்சாவி போட்டு திருடுவது இவர்களின் வழக்கம். பைக்குகளை திருடிக்கொண்டு செல்லும் வழியில் நகைகள், செல்போன்களை பறிக்கும் இந்த கும்பல், போலீஸ் ரோந்து சுற்றுவது தெரிந்தால் திருட்டு பைக்குகளை விட்டு விட்டு தப்பிச்செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

ஓட்டேரியை சேர்ந்த சக்திவேல், சூர்யா, பிரகாஷ், சத்யா, சூர்யா என்ற இவர்களிடம் இருந்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 4 செல்போன்கள், 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4 சவரன் தங்க நகை மற்றும் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 23 இரு சக்கரவாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். நைன் டூ பைவ் ஜாப் என்பதுபோல, தொழில்முறை வேலை செய்வது போல பைக்குகளை திருடுவதையும், நகைகளை பறிப்பதையும் வழக்கமாக கொண்ட இந்த 6 பேரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close