[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா கைரேகை வைத்ததில் சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்
 • BREAKING-NEWS தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் விவரம் சட்டப்பேரவை இணையதளத்தில் இருந்து நீக்கம்
 • BREAKING-NEWS பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு
 • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு வருமானவரித்துறை சம்மன்
 • BREAKING-NEWS சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது
 • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் ஸ்ரீதரன் என்பவர் உயிரிழந்ததாக புகார்
 • BREAKING-NEWS சாதாரண தொண்டர்களுக்கும் பதவி கிடைக்கும் இயக்கம் அதிமுக என தம்பிதுரை எம்.பி. பெருமிதம்
 • BREAKING-NEWS நாமக்கல்: மணிக்கட்டிபுதூர் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS கிருஷ்ணகிரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது - முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
 • BREAKING-NEWS 17 ஆண்டுகளாக வயிற்றில் 12 இன்ச் ரப்பர் குழாயுடன் வாழ்ந்த பெண்!!!
 • BREAKING-NEWS சென்னையில் எடை குறைப்பு சிகிச்சையால் பெண் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
 • BREAKING-NEWS சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் திருச்சி- கோவை சாலையில் போராட்டம்
 • BREAKING-NEWS சென்னை ஆதம்பாக்கம் அருகே போலீஸ்போல் நடித்து மூதாட்டியிடம் இருந்து 6 சவரன் கொள்ளை
 • BREAKING-NEWS கரூரில் அரசு பணி ஒப்பந்ததாரர் சங்கர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
குற்றம் 30 Aug, 2017 10:26 AM

ரஷ்ய இளைஞனால் உருவாக்கப்பட்ட விளையாட்டு... உயிர்பறிக்கும் ’ப்ளுவேல்’

activism-as-a-blue-whale-challenge

2013 ஆம் ஆண்டு ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இணைய விளையாட்டு ப்ளூவேல் சேலஞ்ச். சமீபத்தில் இந்தியாவிலும் இந்த விளையாட்டு உடுருவியுள்ளது. 50 படி நிலைகள் வரை கொண்ட இந்த இணைய விளையாட்டு உயிர்பறிக்கும் ஆபத்தான விளையாட்டு என்று எச்சரிக்கிறார் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் செந்தில் குமார்.

ப்ளுவேல் ஆன்லைன் விளையாட்டு சைக்காலஜி படித்த 22 வயது இளைஞனால் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட உயிர்கொல்லி விளையாட்டு தான் இது. 50 படி நிலைகலைக் கொண்டது இந்த விளையாட்டு. நடுநிசியில் பேய் படம் பார்ப்பது, ஆளில்லாத இடத்தில் தன்னந்தனியே நடந்து செல்வது, திமிங்கலத்தின் உருவத்தை கையில் கீறி வரைவது என நீளும் இந்த படிநிலைகள் இறுதியில் தற்கொலை செய்து கொள்வதில் முடிகிறது. இந்த விளையாட்டு ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் நூற்றுக் கணக்கில் இளம் உயிர்களை காவு வாங்கிய நிலையில் தடை செய்யப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட எந்த ஒரு விசயமும் இந்தியாவிற்கு வருவது போல் தற்போது வந்திருப்பதுதான் இந்த ப்ளுவேல் ஆன்லைன் விளையாட்டும்.

ப்ளுவேல் ஆன்லைன் விளையாட்டில் பிள்ளைகள் ஈடுபடாமல் தடுக்க, கண்காணிக்குமாறு பெற்றோருக்கு சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யாவில் தொடங்கி பல்வேறு நாடுகளில் சிறுவர்களின் உயிரை பறித்த இந்த விளையாட்டு நம் நாட்டிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. 

இந்த நிலையில் தான் கூகுள், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம், மைக்ரோசாப்ட் மற்றும் யாகூ நிறுவனங்கள்‌ இந்த விளையாட்டையும், அதன் தொடர்பு வலையையும் அகற்ற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. ஆயினும் இன்னும் இந்த விளையாட்டுக்கான தொடர்புகள் துண்டிக்கப்படவில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்பறிக்கும் ப்ளுவேல் விளையாட்டை சைபர் கிரைம் மூலம் கண்காணிக்க முடியாது எனவும், பெற்றோர்கள் கவனமாக இருப்பதன் மூலமாகவே குழந்தைகளை பாதுகாக்க முடியும் எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இது குறித்த புகார்கள் எதுவும் வரவில்லை என்று கூறும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபடாமல் குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்கிறார்கள். 

ப்ளுவேல் விளையாட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் ந‌டவடிக்கை எடுத்தாலும் பெற்றோர் தனது பிள்ளைகளுடன் நெருக்கமாகவும், கருத்து பரிமாற்றம் உடையவர்களாகவும் இருந்தால் இதுபோன்ற எந்த புறக்காரணியும் குடும்பத்தில் ஒரு உயிரை பறித்து சென்றுவிட முடியாது ‌என்பதே உளவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close