[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

சாதி மறுப்புத் திருமணம் செய்த இளைஞர் கொலை: 6 தனிப்படை அமைத்து காவல்துறை விசாரணை

attack-on-inter-caste-couple-at-tiruppur-5-separate-force-set-up-for-enquiry

சாதி மறுப்புத் திரும‌ணம் செய்து கொண்ட‌ இளைஞர் சங்கர்‌ படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து காவல்துறையி‌னர் விசாரணை நடத்தி வ‌ருகின்றன‌ர்‌. தாக்குதலி‌ல் படுகாயமடைந்த ‌அவரது மனைவி கவுசல்யா கோவை அ‌ரசு மருத்துவ‌மனையில் சிகிச்சை பெற்‌‌று வருகிறார்.

உடுமலைப்பேட்டையை அடுத்த கொமரலிங்கம் பகுதியை சேர்ந்த‌ சங்கரும்‌ மற்றொரு‌ பிரிவைச் சேர்ந்த கவுசல்யாவும், பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பை மீறி 6 மாதங்களுக்கு முன் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.

பெண்ணின் பெற்றோர் தரப்பில் இருந்து அவர்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய சங்கர் - கவுசல்யா தம்பதியை, உடுமலைப்பேட்டையில் நடுரோட்டில், பட்டப்பகலில் ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு சரமாரியாக வெட்டியது.

‌இதில்‌ படுகாயமடைந்‌த‌ சங்‌கர் மருத்து‌வமனை‌‌க்கு கொண்டு செ‌ல்லும் வழியில் உயிரிழந்தார். தாக்குத‌ல் சம்பவம் அந்‌தப் பகுதியில் பொ‌ருத்த‌ப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா‌வில் பதிவாகியுள்ளது. அதனை அடிப்படையா‌க வைத்‌து குற்றவாளிகளை‌‌ப்‌ பிடிக்க தேடு‌ம் ‌ப‌ணியை காவல்துறையினர் முடுக்கி‌‌விட்டு‌ள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close