[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 3 குழந்தைகளை விற்றதாக ராசிபுரத்தில் கைதான குழந்தை விற்பனை தரகர் அமுதா வாக்குமூலம்; விருப்ப ஓய்வுபெற்ற செவிலியரும் தரகருமான அமுதாவிடம் போலீசார் தீவிர விசாரணை
  • BREAKING-NEWS சர்வதேச உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் மனு பாகர், சவுரப் சவுத்ரி தங்கம் வென்றனர்
  • BREAKING-NEWS இணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதள பிரதிநிதிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்தி ஜூன் 6ல் அறிக்கை தர வேண்டும் - சைபர் குற்றங்களை தடுக்க சமூகவலைதள கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இலங்கையின் நுவரெலியா நகரில் ஹவேலியா பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் கொழும்பு கடற்கரை முத்துவாரம் பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஆயுதங்களுடன் மூவர் கைது
  • BREAKING-NEWS உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க இருந்த குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல்; நீதிபதி ரமணா விலகலால் நாளை தொடங்கவிருந்த விசாரணையில் தாமதம் ஏற்படலாம் என தகவல்
  • BREAKING-NEWS வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி

திருவெறும்பூரில் 8 பேரைக் கொன்று புதைத்த சப்பாணி: சடலங்கள் மீட்பு பணியில் போலீசார்!

8-members-murder-by-sappani-from-tiruvarambur

திருச்சி திருவெறும்பூர் அருகே 8 பேரைக் கொன்று, புதைத்ததாக கொலை செய்தவரே வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரம் பத்தாளப்பேட்டை என்ற இடத்தில் வாய்கால் பகுதியில் 8 பேரைக் கொன்று புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சாதாரண கூலி செய்து வரும் சப்பாணி என்பவரே இத்தகைய சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். காவல்துறையினர் விசாரணையில் நண்பர் தங்கதுரையை நகைக்காக ஆசைப்பட்டு சப்பாணி கொலை செய்து புதைத்து தெரியவந்துள்ளது.

இதேபோல், துறையூறை அடுத்த உப்பிலியபுரம் அதிமுக கவுன்சிலர் குமரேசன் என்பவர் கடந்த ஜூன் மாதம் காணாமல் போனார். அவரும் சப்பாணியால் கொலை செய்யப்பட்டிருக்கலம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சடலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த தேடுதல் வேட்டையில் குமரேசன் உடல் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அவருடைய தலைப்பகுதியை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் 2009-ஆம் ஆண்டு காணாமல் போன அந்த பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் தந்தையையும் சப்பாணி கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், பல கொலைகளை பணத்திற்காக சப்பாணி செய்திருக்கலாம் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சப்பாணியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், தங்கதுரை கொலை வழக்கில் சப்பாணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பிடித்து விசாரித்தபோது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், சில கொலைகளில் இவருக்குத் தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை, 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், கொலை செய்யபட்டவரின் சடலங்கள் தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close