[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

“கைகளை விரித்து பறக்கும் சூர்யா”-வெளியானது "சூரரைப் போற்று" போஸ்டர்..!

surya-s-soorarai-potru-first-look-released-today-and-celebrated-by-fans

‘இறுதிச்சுற்று’ படத்தை அடுத்து சுதா கொங்கரா இயக்கும் படம், ’சூரரைப் போற்று’. சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். மற்றும் ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

Image result for sudha kongara

ஏர் டெக்கான் உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் தயாராகிறது. வாழ்க்கை வரலாறு படமாக இல்லாமல், அவர் செய்த நல்ல விஷயங்களை மட்டும் வைத்து படம் உருவாவதாகக் கூறப்படுகிறது. இதில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

Image result for aparna balamurali

இந்நிலையில் ‘சூரரைப் போற்று’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் சூர்யா இரு கைகளை விரித்துக்கொண்டு வானை நோக்கி பறப்பது போல் இருக்கிறார். இந்தப் போஸ்டர் வெளியான உடன் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து வருகின்றனர். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால், ரிலீஸ் தேதி இப்போது மாற்றி வைக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த வருடம் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close