தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஜூன் 23- ஆம் தேதி தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலையும் தேர்தல் தொடர்பான அறிவிப்பையும் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை குறித்து நடிகர் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது. இந்த விசாரணை நாளை நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, நடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை தமிழக அரசு இன்று நியமித்துள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!
சர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை
திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..!
குடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews
குடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!